பாநாசம் செய்தியாளர்.
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் பொங்கல் கொண்டாட்டம் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது …
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார் உதவி ஆளுநர் வெங்கடேசன், ஆலோசகர் காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் சங்கர் வரவேற்று பேசினார் விழாவில் ரோட்டரி சங்கத்தின் மன்னாதி மன்னன் தலைவர் ஜெயக்குமார் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிசிறப்புரையாற்றினார் விழாவில் ரோட்டரி சங்க இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முடிவில் செயலாளர் முகம்மது ரஹ்மத்துல்லா நன்றி கூறினர்.