வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நல சங்கம் துவக்க விழாவும், தூய்மை காவலர்களுக்கு புத்தாடையும், சிறப்புகளும் செய்து கொண்டாடினர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் சிமிலி மேட்டு தெருவில் உள்ள, திருவள்ளுவர் நகரில் குடியிருப்போர் நல சங்க துவக்க விழாவும், நகரின் பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது.
விழாவில் தூய்மை பணியாளர்கள் மூன்று பேருக்கு குடியிருப்போ நல சங்கத்தின் சார்பில் புத்தாடைகளும், இனிப்புகளும் வழங்கி மகிழ்ச்சியான கொண்டாட்டமாக நடைபெற்றது.
இதில் அந்த நகரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தருவதற்காக குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் இரண்டு குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திருவள்ளுவர் நகரில் குடியிருப்போர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டார்கள்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந் நிகழ்வு வலங்கைமான் பகுதியில் மகிழ்ச்சியோடு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.