மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் தலைமையில், சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நெடுஞ்சாலைகளில் மதுரை மாவட்டத்தில் பக்கவாட்டுச் சாலைகளிலிருந்து தவறான எதிர் திசையில் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி அதன் ஓட்டுநர்களுக்கு சாலை விபத்தினைப் பற்றி எடுத்துரைத்து விபத்தினை தவிர்க்கும் பொருட்டு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சியானது மதுரை மாட்டுத்தாவணி, சர்வேயர் காலனி சந்திப்பில் உள்ள ஜவுளி நிறுவனம் மற்றும் பிரபல மருத்துவமனைக்கு செல்வதற்காக நேரத்தை குறைக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுடைய வாகனத்தை சாலையை கடந்து எதிர் திசையில் பயணிப்பதாக வந்த தகவலை அடுத்து இச்செயல் நடைபெறாமல் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, சரவணக்குமார், சம்பத்குமார். மனோகரன் ஆகியோர் இணைந்து அபராதம் இல்லாமல் வாகனங்களில் செல்வதற்கு அறிவுரைகள் வழங்கினர்.

இச்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் ஆகியோர் தடுத்து நிறுத்தி சாலை பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி அவர்கள் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலூர் சாலையில் சென்ற பொதுமக்களிடம் நடைபாதையில் ஓரமாக கவனித்து செல்லும்படியும், சாலைபாதுகாப்பு பற்றி எடுத்துக்கூறி சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *