போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு பர்கூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சி.வீ.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுடைய 107 வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ள் நான்கு வழி சாலையில் எம்ஜிஆர் அவர்களது திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் எம்ஜிஆர் அவர்களது உருவ படம் பொறித்த கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினர்.
பின்னர் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தூயமணி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செட்டிகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெற்றிசெல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் எஸ்.எம்.மாதையன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் திருமால், பர்கூர் ஒன்றிய துணைச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கே.சி.செல்வம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப இணை செயலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி சிவசங்கரன், சரசு மனோகரன், மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான நாகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நகர அவைத்தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் குணசுந்தரி சீனிவாசன், ஒன்றிய இணை செயலாளர் டி.ஆர்.சிவக்குமார், வார்டு உறுப்பினர் ஜெயவேல், போக்கம்பட்டி கிளைச் செயலாளர் பைனான்ஸ் வேல், ஊராட்சி கழக செயலாளர்கள் வைரவன், விஜயரங்கன், செந்தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் பி.எம்.ரமேஷ்குமார் வரவேற்றார், இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்கரவர்த்தி, முல்லைராஜா, ஒன்றிய விவசாய அணி செயலாளர் கே.கே.முனுசாமி, கிளை செயலாளர்கள் ஸ்ரீ அண்ணாமலையார் கன்ஸ்டரக்ஸன் கார்த்திகேயன், மடத்தனூர் சக்ரவர்த்தி, அனிஷ்குமார், பிரகாஷ், ஆனந்த், பெருமாள், கோவிந்தசாமி, சேகர், வணங்காமுடி, விஜயன், திருப்பதி, தூயமணி, மற்றும் அதிமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி நிறைவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.