வலங்கைமான் புங்கஞ்சேரியில் தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் 60 அடி உயரத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி புங்கஞ்சேரி பகுதியில், வலங்கைமான் நகர திமுக சார்பில் தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளை முன்னிட்டு 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினை வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தனிமாறன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்