காட்டுமன்னார்கோவில் ஊடக, பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:

கடலூர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்மகும்பல்களால் நேற்று முன்தினம் இரவு கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் ஊடகப் பத்திரிகையாளர் சங்கங்கள்
கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று
காட்டுமன்னார்கோவில் ஊடக, பத்திரிகையாளர்கள்
தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர்,விவசாய அணியினர், தொழிலாளர் அணியினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்
அதில்இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை
வன்மையாக கண்டிப்பது மட்டுமில்லாமல்,
உயிருக்கு ஆபத்து உள்ளது

என முன் கூட்டியே காவல்துறையிடம் தகவல் கூறியும் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு உடனடியாக பணியிட நீக்கம் செய்து அவர்கள் மீது குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஊடக, பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் , தமிழக அரசு சிறப்பு தனிப்படை அமைத்து உண்மையான குற்றவாளிகளையும்,
அவர்களை தூண்டி விட்டவர்களையும்
உடனடியாக கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என வலியுறுத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்ட நியூஸ் 7 செய்தியாளர் குடும்பத்தினருக்கு உடனடியாக10 லட்சம் நிவாரணம் வழங்குமாறும், அவரின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கவேண்டும்,பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாய அணியினர், சமூக ஆர்வலர்கள் திரலாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *