தமிழக அரசு 06.10.2025 வெளியிட்ட அரசாணையின்படி (அ.எண்-313) போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் என்னும் ஊர் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்குமாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் நாம் தமிழர் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரேம் சந்தர், தலைமையில் மண்டல செயலாளர்கள் மணிகண்டன், அடைக்கலம், முன்னிலையில் தொகுதி தலைவர் அய்யா. ரவி பாண்டி ஆகியார் இணைந்து நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர், தமிழக அரசின் அரசு ஆணையை உடனே நடைமுறைப் படுத்த வேண்டும் என கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது.
மு. முத்துக்குமார் தேனி செய்தியாளர்