அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம் கே ஷேக்தாவூத் தலைமை தாங்கினார் வட்ட கிளைச் செயலாளர் சிவதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்
மாநில செயற்குழு உறுப்பினர் அம்பேத்கார் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி வட்டார செயலாளர் வெங்கடாஜலம் மாவட்ட இணை செயலாளர் சந்துரு ஓய்வு பெற்ற அலுவலர் காமராஜ் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரத்தினம் வட்டார இணை செயலாளர் நிவேதா உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் வட்டார இணைச்செயலாளர் மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார் 1/7/2025 முதல் 3% அகவிலைப்படி வழங்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது