கும்பகோணம் பகுதியில் 75 வது
குடியரசு தின விழா.

இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறதுஇதையொட்டி
கும்பகோணம் சட்டமன்ற அலுவலகத்தில் எம்.எல்.ஏ.அன்பழகன் தேசிய கொடியை ஏற்றினார்.
இதுபோல் வாணி விலாஸ சபா முன்பு மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாண சுந்தரம் எம்.பி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளகாத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ராதிகா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

கும்பகோணம் மாநகராட்சி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் மேயர் சரவணன் துணை மேயர் சுப.தமிழழகன் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காந்தி பூங்கா வளாகத்தில் துணை மேயர் சுப. தமிழழகன் தேசிய கொடியை ஏற்றினார்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் மேலான் இயக்குனர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதனையடுத்து போர்ட் டவுன் ஹாலில் தூய்மை பணியாளர் செல்வகுமாரி தேசியக் கொடி ஏற்றி வைத்தார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளிலில்
கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *