சீர்காழியில் தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் இந்திய அணி கைப்பந்தாட்ட வீரர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி மாணவர்களை வளர்ப்பது குறித்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 14 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் இந்திய கைப்பந்தாட்ட அணி வீரர் கார்த்திகேயன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளருக்கு மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர், மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் பள்ளி தாளாளர்,தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய இந்திய கைப்பந்தாட்ட வீரர் கார்த்திகேயன் கூறுகையில் : மாணவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு பெற்றோருக்கும் உண்டு,மாணவ மாணவிகளை சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுடன் வளர்ப்பதன் மூலம் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுப்பெறுவர், தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவுகளை மட்டுமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கொடுத்து வளர்க்க வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *