திருவெண்காடு கோவில்(புதன் ஸ்தலம்) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணி கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் நவகிரகங்களில் புதன் பகவானும் சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்தியும் நடராஜபெருமானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணி கோவில் கணக்கில் சேர்க்கப்படும் அதன்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், ஆய்வாளர்கள் ரவி ,பத்ரி நாராயணன் ,கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு வங்கி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் காணிக்கைகளை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

முடிவில் பக்தர்கள் செலுத்திய 10 லட்சத்து 94 ஆயிரத்து 266 ரூபாய். மேலும் 15 கிராம் தங்கம் 98 கிராம் வெள்ளி 76 மலேசியா ரிங்கட்10 சிங்கப்பூர் டாலர் 20 யூரோ 206 அமெரிக்க டாலர் ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. காணிக்கையாக கிடைத்த பணத்தினை வங்கி கணக்கில் அதிகாரிகள் முன்னிலையில் வரவு வைக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *