இந்திய அரசு ஜவுளித்துறை கைவினை பொருட்கள் துறை சார்பாக கிராமப்புற பெண்களுக்கு தொழில் பயிற்சி
அலங்காநல்லூர்

மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள வயலூர் ஊராட்சியில் இந்திய அரசு ஜவுளித்துறை கைவினைப் பொருள்கள் துறை சார்பாக குருஜி சிஷ்யா ஹாட் ஸ்லிப் பிரதிக்ஷன் சார்பாக கிராமப்புற பெண்களுக்கு இரண்டு மாத தொழில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது
இந்த பயிற்சி வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி தலைமையில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம், பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, முன்னிலையிலும் பெட்கிராட் பொதுச் செயலாலர் அங்குசாமி, கலந்து கொண்டு வரவேற்பு நிகழ்த்தினார்
நிகழ்ச்சியில் மண்டல இயக்குனர் கைவினைஞர் துறை எம்.பிரபாகரன் கைவினைஞர் உதவி இயக்குனர் நாகர்கோவில் ஏகே.ரூப்சாந்தர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் ஹேண்ட் கிராப்ஸ் ஹெச்.பி.ஓ.பிரஜிஷா, கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார் மதுரை மாவட்ட தொழில் மைய துணை மேலாளர் எம்.ஜெயா, திட்டங்களை விளக்கி பேசினார்.
ஹெச் ஜி எல் பவுண்டேஷன் நிதி அலுவலர் டி சுஜின் வாழ்த்துரை வழங்கினார் பெட்கிராட் பொருளாளர் ஜி சாரல் ரூபி நன்றி கூறினார் பயிற்சியாளர்கள் கண்ணன் பத்மாகுமாரி, குடும்ப நல ஆலோசகர் கதிரவன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் கிராமப்புற பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.