புதுச்சேரி திருபுவனை தொகுதி திருவண்டார் கோயில் அடுத்து உள்ள கொத்தபுரி நத்தம் – சன்னியாசி குப்பம் சாலையில் தொழிற்சாலைகளும்,குடியிருப்புகளும் நிறைய உள்ளது.

இந்த பகுதியில் வேலைக்கு செல்வோர் இச்சாலைவழியாகத்தான் செல்கின்றனர்,
கொத்தபுரி நத்தம், சன்னியாசிகுப்பம் மும்முனை சந்திப்பில் சாலையின் இரு புறங்களிலும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் திரும்பும் போது விபத்து ஏற்படும் என்பதை தெரிந்தும் அமைதியாக இருக்கும் தொகுதி சமஉ அங்காளன் இருப்பதால் அவர் மின்துறை அதிகாரிகளிடம் பேசி எப்பொழுது தான் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்து கொடுப்பாரோ என தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் எந்த கட்சியையும் சாராதவர் என்பதால் இவரது பேச்சு எடுபட வில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பி வாக்களித்த தொகுதி மக்களுக்கு இவரால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் இவர் அடுத்த தடவை வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. முதியோர் பென்ஷன் கொடுப்பது சாலைக்கு பூமி பூஜை போடுவது 100 நாள் வேலை திட்டத்தை தொடங்கி வைப்பது போன்ற அடிப்படை பணிகளில் ஒன்றும் அச்சீவ்மென்ட் இல்லை என்று தொகுதிமக்கள் குமுறுகின்றனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை புதிய தொழிற்சாலைகள் இல்லை செவ்வாய்தோறும் மக்கள் கூடும் வார சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை ரவுடிகள் அட்டகாசம் போன்ற இன்னும் எத்தனையோ அலங்கோலங்களில் சிக்கித் தவிக்கிறது

திருபுவனை தொகுதி விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் 2 கி. மீ.தூரம் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும் அங்கு வழியை ஏற்படுத்தாதது எம்எல்ஏவின் அலட்சியம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *