நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி அறிவித்ததை தொடர்ந்து பாபநாசத்தில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு செய்து இன்று அக்கட்சியின் பெயரை வெளியிட்டார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் வினோத்குமார் பாபநாசம் ஒன்றிய தலைவர் ராஜா முன்னிலையில் குவிந்த அவரது ரசிகர்கள் ஊர்வலமாக வந்து

பாபநாசம் அண்ணா சிலையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி தொடங்கியதை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது விஜயின் புதிய கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் வாழ்க எனவும் நாளைய முதல்வரே எனவும் அவரது ரசிகர்கள், கோஷ முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் ஆசிக் பாபநாசம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சித்திக் பாபநாசம் நகர தலைவர் உதய சூர்யா பாபநாசம் ஒன்றிய மாணவரணி தலைவர் ஆகாஷ் பாபநாசம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரியாஸ் பாபநாசம் ஒன்றிய பொருளாளர் முகமது ரைசுதீன் பாபநாசம் இளைஞரணி நகர தலைவர் பாலா மற்றும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *