அ.சிராஜுதீன்.
மாவட்ட செய்தியாளர்
ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டு விழாவில் பாரத தேசம் அன்னபூரணியாக அமைந்துள்ளது

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேசினார் ஆடுதுறை பேரூராட்சி தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் இணைந்து விவேகானந்தர் விளையாட்டு திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா கும்பகோணம் அருகே ஆடுதுறையில் நடைபெறும் நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று காலை நாகலாந்து கவர்னர் இல. கணேசன் வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தானுக்கு சென்றார்.

இதனை தொடர்ந்து கதிராமங்கலம் அருகே மகாராஜபுரம் குலதெய்வ கோயிலான காத்தாயி அம்மன் கோயிலில் கவர்னர் இல.கணேசன் சிறப்பு வழிபாடுகளை செய்தார்.
இதனையடுத்து
ஆடுதுறை வீரசோழன் கோசி.மணி திருமண மண்டபத்தில் விவேகானந்தர் விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஏ.வி.கே. அசோக்குமார், பா.ம.க. மாநில நிர்வாகி கோ. ஆலயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ராமபிரசாத் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ராமகிருஷ்ணா மடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அடிமைபடுத்திய ஆங்கிலேயர்கள்
தான் வரலாறு எழுதப்பட்டது இந்துஸ்தான், பாரதம், இந்தியன், என்று சொன்னால் தான் தேசம் விழிப்புணர்வு அடையும்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட உருவம் தற்போது மாறி இருக்கலாம், பெயர் மாறி இருக்கலாம் ஆனால் அவர்கள் அனைவரும் மறு ஜென்மம் எடுத்து
பாரத நாட்டில் வருகை புரிவார்கள்.
காங்கிரஸ்ஆட்சியிலும், மத்திய ஆட்சியிலும் பாரத நாடு வளர்ச்சி அடைந்து இருக்கிறது கோதுமை தானியங்கள் கடன் வாங்கி இருந்தோம். ஆனால்
தற்போது தேசம் அன்னபூரணியாக
உள்ளது.
வருகிற 25 ஆண்டுகளில் கல்வி, தொழில், என அனைத்திலும் தேசம் உயர்வு அடைந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார் கவர்னர் வருகையை ஒட்டி கும்பகோணம், கோவிந்தபுரம் ஆடுதுறை, மகாராஜபுரம், கதிராமங்கலம் பகுதிகளில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.