தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டி பேரூராட்சியில் நீண்ட நாள் மக்களின் கோரிக்கையான சின்னமனூர் முல்லை பெரியாற்றிலிருந்து குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் நீர்நிலை தொட்டி அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்

அதன் தொடர்ச்சியாக அம்ருத் 2.0திட்டத்திற்கு ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நீர்நிலைத் தொட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஓடைப்பட்டி தனியார் மண்டபத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனுக்கு சண்முக நதியில் இருந்து அம்ருத் திட்டத்தின் மூலம் தண்ணீர் குடிநீருக்காகவும் விவசாயத்துக்காக கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்தமைக்காக பாராட்டு விழா ஓடைப்பட்டி விவசாய சங்கம் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் விடுபட்ட மகளிர்க்கு விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது,

இதில் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்

அதனை தொடர்ந்து பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் எந்நேரமும் மக்களே எனது முதல் பணி நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு முழுமையாக செயல்பட்டு வருகிறது


இதன் மூலம் ஓடைப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் சரிவர நடந்து வருவதால் விவசாய பணிகள் எந்த ஒரு தொய்வின்றி நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்பழனியில் சாலை பணிவெள்ளையம்மாள்புரத்தில் குளம் தூர்வார்தல் போன்ற பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி,தி.மு.க.ஒன்றிய செயலாளர்
அண்ணாதுரை.ஓடைப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் குமரேசன்,ஓடைப்பட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன்,வார்டு கிளை உறுப்பினர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்களும் தி.மு.க. உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *