கும்பகோணம் அருகே இஸ்லாமியர்கள்
புனித இரவு

தஞ்சை ம மாவட்டம் அருகே திருப்பனந்தாள் முஹையத்தின் ஆண்டவர் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் புனித பயணம் மேற்கொண்ட நினைவு தினத்தையொட்டி பள்ளிவாசல் தலைமை நிர்வாகி எம்.ஆஷாத் அலி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக
மௌலவி கலீல் அகமது ஆலிம் ஹைரி கலந்து கொண்டு அப்போது பேசியதாவது:-

விண்ணுலக பயணம் மிஃராஜ் மூலமாக முஸ்லிம்கள் படிப்பினை பெற வேண்டிய செயல்
ஐந்து நேரமும் வணக்க வழிபாடு களில் ஈடுபட வேண்டும். உலகத்தில் மனிதனின் ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் வழங்கப்படும் என உலக நன்மைகள் பற்றி வலியுறுத்தி பேசினார்.

முன்னதாக மதரஸா மழலையர் மாணவர்கள் கன்னி மொழியில் இறை வேதங்களை பற்றி பேசினர்.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *