அலங்காநல்லூர்

தேனி பாராளுமன்றம் சோழவந்தான் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் டி. அய்யங்கோட்டை சக்திகேந்திரா கிராமத்திற்கு செல்வோம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தெருமுனை பிரச்சாரககூட்டம் பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர்கதலிநரசிங்கபெருமாள்ஜி தொகுதி பொறுப்பாளர் ராஜா, தொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி, சட்டமன்ற இணைஅமைப்பாளர் ராமதாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சுவாமி, மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், சித்ராதேவி, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமார், மற்றும் மண்டல தலைவர் இருளப்பன், மண்டல் பொதுச் செயலாளர் கணேசன், ராஜா, மற்றும் கிராமத்துக்கு செல்லும் நிகழ்ச்சியின் மாவட்ட பொறுப்பாளர் அருண்பாண்டியன், பிரச்சார பிரிவு செந்தாமரைகண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசியது 10 ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்து கொண்டு உள்ளார்

ஆனால் தமிழகத்துக்கு கொடுக்கும் திட்டங்களை மாநிலத்தில் நடைபெறும் திமுக அரசு தடுத்து மக்களுக்கு வழங்குவதில்லை மத்திய அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்து வண்ணம் செயல்படுகிறது

திமுக ஆட்சியில் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா வியாபாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மணல் கடத்தல் உள்ளிட்டவைகளால் தமிழகம் சுடுகாடாக மாறி விட்டது மாநில ஆட்சியில் உள்ளவர்கள் மத்திய அரசுடன் கைகோர்த்து மாநிலத்துக்கு தேவையான நிதிகளை பெற்று மக்களுக்கு எண்ணற்ற பயனை தர வேண்டும் ஆனால் இங்கு நடைபெறும் ஆட்சியில் விரோத போக்கை கடைபிடித்து கபட நாடகமாடிக் கொண்டு மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பது உள்ளிட்ட செயல்களை செய்து கொண்டுள்ளனர்

வரும் 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் என்றும் மாநிலத்தின் தலைவர் அண்ணாமலை தான் முதல்வர் என்றும் கோஷம் எழுப்பினர் 10 ஆண்டுகள் சிறப்பாக மத்திய அரசு ஆட்சி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளது

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்களே வருவார் என்று கூறினார்கள் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கணேசன் ரவிசங்கர், வேல்முருகன்,செந்தாமரைக்கண்ணன், வீரையா, கருப்புசாமி, பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *