திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி சிவாலயம். மிகவும் தொன்மைவாய்ந்த இந்த ஆலயம் காசிக்கு நிகரானது எனக்கு அழுதப்படுகிறது..
மேலும் மூர்த்தி தளம் தீர்த்தம் அமைப்பெற்ற சிறப்பு வாய்ந்த இந்த தலம் தேவார திருவாசக பதிகங்களில் பாடப்பெற்றுள்ளது.

மேலும், இவ்வாலயத்தில் எமதர்மனுக்கு என தனி சன்னதி அமையப்பெற்று உள்ளது. மனிதர்களுக்கு ஏற்படும் எமபயத்தை நீக்கி ஆயுளை அதிகரிக்கும் பலன் கொண்ட இவ்வாலயத்தினை ஆயுள்விருத்தி அளிக்கும் ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது.
இந்த ஆலயத்தின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது..

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 29 1 202 4 விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி அமைக்கப்பட்டு எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

தொடர்ந்து பூஜையை தொடர்ந்து.. எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து ஒன்பது மணிக்கு யாத்திரா தானம் யாகசாலையிலிருந்து/மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு சரியாக 10.00 மணிக்கு அனைத்து விமான கோபுரங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்க பட்டது. பிறகு மூலவருக்கு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்கு சென்னை கோவை திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *