செய்தியாளர் ச முருகவேல் புதுச்சேரி
புதுவையில் கட்டவுட்டு கலாச்சாரம் தலை விரித்தாடி பல உயிர்களை காவு வாங்கி இருக்கிறது ஆளும் கட்சி எதிர்க்கட்சி அமைப்புகள் இயக்கங்கள் என எதுவும் விட்டு வைக்கவில்லை இந்த கட்டவுட் கலாச்சாரத்தை. புதுவை நகரம் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் கட்டவுட் வைப்பதற்கு தடை தடை இருக்கும்போது அதை யாரும் மதிக்கவில்லை ஆகவே இந்த விஷயத்தில் பொறுத்துப் பார்த்த நீதிமன்றம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கலெக்டர் வல்லவனுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது

அதனைத் தொடர்ந்து கலெக்டர் வல்லவன் அதிரடியாக புதுவை நகரம் மற்றும் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் சாலையோரங்களில் வைத்திருக்க கூடிய அனைத்து பிளக்ஸ் பேனர்கள் கட்டவுட்டுகள் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்
இதனைத் தொடர்ந்து புதுவை முழுவதும் நேற்று முதல் பொதுப்பணித்துறை சாலை பிரிவினர் காவல் துறையினரின் பாதுகாப்போடு பிளக்ஸ் பேனர்கள் கட்டவுட் கள் என அனைத்தும் அதை தாங்கி நிற்ககும் கம்புகள் உட்பட அனைத்தையும் அடியோடு அப்புறப்படுத்தினர். அந்த வகையில் இன்று கரியமாணிக்கம், சூரமங்கலம் நெட்டப்பாக்கம் கல்மண்டபம் மடுகரை என அனைத்து பகுதிகளிலும் இருந்த பேனர்கள் பொதுப்பணித்துறை சாலை பிரிவு இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணன் தலைமையில் அகற்றப்பட்டன.