புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவினர் மோடியின் ஆட்சிக்கு எதிராக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மகிளா காங்கிரஸ் தெற்கு மாவட்ட பிரிவு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரையில் நடந்த நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ருக்குமணி ஜெய தாங்கினார். புதுவை மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, துணைத் தலைவி ஜெயலட்சுமி, மாநில குழு உறுப்பினர் விஜயகுமாரி, மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நிஷா, தொகுதி தலைவர் குணபூஷணம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய் வேணி முன்னாள் கவுன்சிலர் அனுசுயா, முன்னாள் மகிலா காங்கிரஸ் தலைவி அஞ்சாலாட்சி, கிருஷ்ணா தேவி, பொன்னி, ரத்னா, நெட்டப்பாக்கம் சிவகாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவது பாஜகவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சியில் மக்கள் மேலும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒன்றரை லட்சம் ரூபாய் மாத சம்பளம் பெறும் மோடி ஐந்து லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மேல் கோட்டு அணிகிறார் . பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் மோடியின் ஆட்சி விரட்டியடிக்கப்பட வேண்டும். தேர்தலில் மக்கள் பழைய முறைப்படி வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி வாக்களிக்கும் முறை வரவேண்டும். அதுதான் உண்மையான நியாயமான தேர்தலாக அமையும் என்று அனைத்து மக்களும் கருதுகின்றனர். நாங்களும் அதைத்தான் வலியுறுத்தி கூறுகிறோம். ஈவி முறைக்கு அனைத்து மக்களும் இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த மகிளா காங்கிரஸ் கட்சியினர், இறுதியில் பாஜக ஆட்சிக்கும் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *