நன்னிலம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
நன்னிலம் அருகே
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களைப் பற்றி முகநூலில் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசிய கொல்லுமாங்குடி பகுதியைச் சார்ந்த ஆசை தம்பியை கைது செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரளம் காவல்நிலையத்தை முற்றுகை…..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களைப் பற்றி முகநூலில் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசிய கொல்லுமாங்குடி பகுதியைச் சார்ந்த ஆசை தம்பியை கைது செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழோவியா தலைமையில் பேரளம் காவல்நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் கணேசன் பேரளம் நகர செயலாளர் சுரேஷ் ,ஒன்றிய செயலாளர் சேதுராமன், நன்னிலம் நகர செயலாளர் பாஸ்கரன் ,ஒன்றிய துணைச் செயலாளர் ரகுராமன், ஒன்றிய துணைச் செயலாளர் விழியரசு, மாவட்ட துணை அமைப்பாளர் கலைவாணன், மாவட்ட துணை அமைப்பாளர் கதிர், மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் .
பின்னர் பேரளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக் கொண்டதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.