திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறிடத்திற்கு மாற்றக்கூடாது சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம். எல் .ஏ பேச்சு

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா‌.காமராஜ் பேசியதாவது, 2017 ஆம் ஆண்டு எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குடவாசலில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி வழங்கப்பட்டது.

இந்த கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு குடவாசலில் அறநிலையத்துறை சொந்தமான இடம் கண்டறியப்பட்டது அப்போது அறநிலையத்துறை தொடர்பான நீதிமன்ற வழக்குகள் இருந்ததால் உடனடியாக இடம் ஒதுக்கி கட்டிடம் கட்ட முடியவில்லை பின்னால் கொரோனா ஊரடங்கு ஆட்சி மாற்றம் ஆகியவைகள் காரணமாக கட்டிடம் கட்டும் பணி தாமதமாகி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு கட்டடம் கட்ட வேறு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது குறித்து இரண்டு முறை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன் தற்போது மூன்றாவது முறையாக கவனத்திற்கு கொண்டு வருகிறேன் திருவாரூர் மாவட்டம் முதலமைச்சரின் சொந்த மாவட்டம் அந்த மாவட்டத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். உங்கள் தொகுதி முதல்வரின் திட்டத்தின் கீழ் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசலில் கல்லூரி கட்டிடம் கட்ட ரூ 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த நிதியின்படி வேறு தொகுதியில் கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது

நன்னிலம் தொகுதியில் கல்லூரி கட்டடம் கட்டு ஒதுக்கப்பட்ட நிதியை அதே தொகுதியிலேயே பயன்படுத்த வேண்டும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசலிலேயே கல்லூரி கட்டிடம் அமைய வேண்டும் என மாணவர்கள் பொதுமக்கள் விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

குடவாசல் அருகிலேயே கல்லூரிக்கு கட்டடம் கட்ட பொருத்தமான இடம் தருவதற்கு அப்பகுதியினர் தயாராக உள்ளனர் எனவே நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *