வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வர்த்தக சங்க மண்டகப்படியை சிறப்பாக செய்வது என வர்த்தக சங்கம் நிர்வாக குழு முடிவு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தக சங்க நிர்வாக குழு கூட்டம், வர்த்தக சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் கே. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் கௌரவத் தலைவர் என். பரதாழ்வார், செயலாளர் ராயல் ஜி திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி, துணைத் தலைவர் என். மாரிமுத்து மற்றும் பா.சிவனேசன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகின்ற வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகாமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் வர்த்தக சங்க மண்டகப்படியை சிறப்பாக செய்வது என்றும், வர்த்தகர் சங்க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குவது என்றும், வருகின்ற மே மாதம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிவில் வர்த்த சங்க இணை செயலாளர் எஸ். சிவசங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *