மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என மன்னாா்குடியில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழா நடைபெற்றது கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது என்றார். இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். படிக்கும் போதே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலை இன்று மாறி உள்ளது.
இளங்கலை படிப்பு படித்த பின்னர் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர் என பேசினார். இவ்விழாவில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடங்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு மாணவவிகளின் பெற்றோர்களின் கைகளால் பட்டமளிக்க வைத்து அமைச்சர் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.