செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம்
கரியமாணிக்கம்
பேருந்து சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,தியாகி வெங்கடசுப்பா ரெட்டியார் திருமண மண்டபத்தை புதிதாக கட்டித் தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொகுதி செயலாளர் மலரவன் தலைமை தாங்கினார்.
மாநில துணை செயலாளர் கதிர் பிரபாகரன், மகளிர் அணி மாநில துணை செயலாளர் மீனா, முதல்வன், மதியழகன், தமிழரசன், பன்னீர்செல்வம், பிரதாப், சதீஷ், அருள் தாஸ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கண்டன உரையின் போது ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த வெங்கடசுப்பாறிட திருமண மண்டபம் பாழடைந்து போய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்து கிடப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் தனியார் திருமணமண்டபங்களை நாடிச் சென்று அதிக அளவில் பணம் விரயம் செய்ய வேண்டி உள்ளது.
அதிமுக கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற பெரியசாமி அதனை அடித்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயவேணி அதனை எடுத்து என் ஆர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள ராஜவேலு ஆக மூன்று எம்எல்ஏக்கள் பதவி வகித்தும் இந்த திருமண மண்டபத்தின் நிலை அப்படியே உள்ளது
என்று பொதுமக்கள் குமுறுகின்றனர். மேலும் எம்பி வைத்திலிங்கமாவது அவரது நிதியிலிருந்து இந்த மண்டபத்தை புதிதாக கட்டித் தர முன்வர வேண்டும், இல்லையென்றால் ஆதி திராவிட நலத்துறை நிதியில் இருந்தாவது மேற்படி மண்டபத்தை புதிதாக கட்ட அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்