திருவாரூரில் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தை தடுக்கும் வழியில் நெகிழி இல்லா உலகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.

திருவாரூரில் தமிழ் கலாச்சார, பாரம்பரிய கலைகளான சிலம்பம் பரதநாட்டியம் கரகாட்டம் கட்டைக்கால் பொய்கால் குதிரை ஒயிலாட்டம், கிராமிய நடனம் மற்றும் யோகா கராத்தே, நாடகம், மேலை நாட்டு நடனம் போன்ற பல்வேறு கலைகள் மூலம் தமிழ்நாட்டின் திருவாரூர் சென்னை கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம், கன்னியாகுமரி விழுப்புரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம், மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி, ராமநாதபுரம் தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தொடர்ந்து எட்டு மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்றது

நிகழ்வினை திருவாரூர் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார் சாதனையை நோபில் உலக சாதனை குழுமம் மற்றும் திருவாரூர் பீட் ஆப் பயர் அகாடமி இணைந்து நடத்தினர்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசான்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் 1500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடியிருந்து கலைத்திருவிழா போன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஈ.பகுத்தறிவு தலைமை தாங்கினார் நோபில் உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த அர்ஜுன், பீட் ஆப் பயர் அகாடமியை சேர்ந்த அரவிந்த், சிஇஓ இந்துமதி அரவிந்த், ஹரிபீட்டர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர் மாணவர்கள் அனைவருக்கும் நோபில் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மேலும் பீட் ஆப் பயர் அகாடமி சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பங்கு பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்று கூடி நன்றி தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *