திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 28ஆம் தேதி புதன் கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது முகாமில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 500 மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் வேலைவாய்ப்பு முகாமில் 11 மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் Avery technology pvt Ltd, Foxconn technology pvt Ltd,Tsmt Technology Indian pvt Ltd, unitech plasto components pvt Ltd,Royal Enfield,India),TVs Training and services Ltd. ,V.k.ayurvedic hospital,Tiruvadi dharisanam tours and travels,logskim solution Pvt Ltd, chennai,SBI LIFE, உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது நேர்முகத் தேர்வில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணையிணை நேதாஜி கல்விக்குழுமத்தின் தாளாளர் தலைவருமான வெங்கட்ராஜிலு வழங்கினார் பணி நியமன ஆணை வழங்கும் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சிவகுருநாதன் வரவேற்புரை ஆற்றினார் விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் விஜயசுந்தரம் முன்னிலை வகித்தார் பணி நியமனம் ஆணை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் செயலர் வி. சுந்தர்ராஜ் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் வேலைவாய்ப்பு முகாமிற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் துணை முதல்வர் (பொ) மற்றும் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் நெல்லிவனம் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர் நிகழ்வின் இறுதியாக தமிழ்த்துறை தலைவர் (பொ) கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *