பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
வலங்கைமான் அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை…பழுதடைந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டம்*

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவிற்கு அரித்துவாரமங்கலத்தில் இருந்து அம்மாபேட்டை வரை செல்லும் நான்கு கிலோமீட்டர் நீளம் உடைய தார் சாலை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தார் சாலையை 83 ரெகுநாதபுரம் ஊராட்சி உள்ளிட்ட 10 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தினந்தோறும் இந்த சாலை வழியாக பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மாபேட்டை ஹரித்துவாரமங்கலம்உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த சாலை கடந்த சில வருடங்களாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக அடிக்கடி இந்த சாலையில் விபத்து ஏற்படுவதாகவும் ஏற்கனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தியதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை யில் இன்று 83 ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள் கொத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த சாலையில் நின்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.