கும்பகோணம் மாநகராட்சியில்
சொத்துவரி, காலிமனை வரி செலுத்தாவர்கள் வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன் நடவடிக்கை.
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் மாநகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் புதைவடிகால் சேவைக்கட்டணம் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை ஆகியவைகளுக்கான நிலுவை மற்றும் நடப்புகள் இருப்பின் உடனடியாக மாநகராட்சியில் நேரிலோ அல்லது இணைய தளம் மூலமாகவோ உடன் செலுத்தி சட்டரீதியான மேல் நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தவறினால், மாநகராட்சியால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு. புதை வடிகால் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
எனவே. வரியினை உடன் செலுத்தி அடிப்படை வசதிகள் முழுமையாக முடித்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.