தென்காசி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரம் மற்றும் பாஜகவிற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைப்பெற்றது
ஆலங்குளம் பேரூராட்சி ஆலங்குளம் மார்க்கெட், பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, சந்தன மாரியம்மன் கோவில் தெரு, நத்தம் மாரியம்மன் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் அருள்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி நவரத்தினம், கடையம் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, பாப்பாக்குடி ஒன்றியம் சுமித்ரா, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் குமரகுருபரன், நாகராஜா, ஆலங்குளம் லிங்கவேல் ராஜா , கணேசன்,ஆன்மீக பிரிவு வைத்தியலிங்கம், விவசாய அணி ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன்,மற்றும் பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவி ஜெயந்தி,வெண்ணி லிங்கபுரம் மாலையப்பன், மற்றும் பச்சைக்கிளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்