மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் : மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த. விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தின் தொடக்க விழா நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்விற்கு மனோலயம் தொண்டு நிறுவனர் ப.முருகையன் தலைமை வகித்தார் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலக முடநீக்கியல் வல்லுநர் கே. கண்ணன் முன்னிலை வகித்தார்.

பிரச்சார ஊர்திப் பயணத்தை,
மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தொடர்ந்து ஆட்சியர் கூறியது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை நலவாரிய அட்டை மூலம் நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகை, பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் மூன்று சக்கர சைக்கிள் காதொலிக் கருவி பார்வையற்றவர்களுக்கு நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி கைக்கடிகாரம், முடநீக்கு சாதனம், ஊன்றுகோல், இலவசப் பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்குரிய நலத்திட்டங்களை தெரிந்து, பயன் பெற வேண்டும் என தெரிவித்தார்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகப் பணியாளர்கள் கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கவனித்தனர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் குடவாசல் வலங்கைமான் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *