திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மாரிமுத்து தலைமை வகித்தார், தேஷ் முன்னிலை வகித்தார். கல்வியாளரும், வரலாற்று அறிஞருமான பேராசிரியர் கருணானந்தன், 638 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், கல்லூரியில் அதிக அளவில் மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.

இந்த நிலைக்கு வந்ததுக்கு பெரும் பங்கு பணிகளை சமூக சீர்திருத்தவாதிகள் செய்துள்ளனர். அவர்களின் அயராத உழைப்பால் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

படித்து பட்டம் பெற்ற பின்பு தான் உங்களுக்கு முக்கியமான பணிகள் காத்திருக்கின்றன. முத்துலட்சுமி, ஜோதி பாய் பூலே போன்று மகளிர் மேம்பாட்டு பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பணிகளை பட்டம் பெறும் பட்டதாரிகள் ஆகிய நீங்கள் ஆற்ற வேண்டும் என்றார்.

இதில் கல்லூரியின் துறைத் தலைவர்கள் புவனேந்திரன், ஜெயராஜ், குமார், ஆஸ்லி பிரிஸ்லா, சாந்தி, கோமதி, பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *