பண்ணாரி வன பகுதியில் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது. பாச போராட்டம் நடத்திய குட்டியானையை உறவுமுறை யாணைக் கூட்டத்தில் சேர்ப்பு

சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதன் குட்டியை உறவின் முறை யானை கூட்டத்தில் சேர்த்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் தண்ணீர் தேடி குட்டியுடன் வந்த தாய் யானை வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதித்ததால் வனப்பகுதிக்குள் மயங்கி விழுந்தது. மீண்டும் எழு முயற்சித்தும் முடியாமல் படுத்துக் கொண்டது. அதன் அருகே 2 மாத பெண் குட்டி யானை ஒன்று தவித்தபடி சுற்றிக் கொண்டு இருந்தது. பண்ணாரி – பவானி சாகர் ரோட்டில் இரவு யானை கத்தும் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் உடனடியாக சத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தி ரேஞ்சர் பழனிச்சாமி தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதிக்குள் யானை பிளிறல் சத்தம் வந்த இடத்தை கண்டுபிடித்து அருகே சென்று பார்த்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நடக்க முடியாமல் உடல் நலம் குன்றிய நிலையில் படுத்து கிடந்தது. அதன் அருகில் அதன் 2 மாதம் ஆன பெண் குட்டி யானை தாயின் அருகில் நின்று அதனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் உடனடியாக யானைக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் சம்பவத்தை வரவைக்கப்பட்டு குளுக்கோஸ் மற்றும் ஊசி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு இடையூறு ஏற்பட்டதால் குட்டி யானையை பாதுகாப்பு கருதி அருகில் குழி வெட்டி குட்டி யானையை குழிக்குள் விட்டு பாதுகாப்புக்காக 2 வனத்துறை ஊழியர்களை குட்டி யானையுடன் குழிக்குள் இறக்கி பத்திரமாக பார்த்துக் கொண்டனர். உடல்நிலை மெலிந்த நிலையில் இரூந்தயானைக்கு கால்நடை மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. அன்று இரவு குட்டியானையை உறவு முறை யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முடிவு செய்தனர். குட்டி யானை ஊழியர்களுடன் குழிக்குள் இருநதபோது அதன் மீது மனித வாடை இருக்கும் என்பதால் யானைகள் கூட்டம் குட்டியை சேர்த்துக் கொள்ளாது என்பதற்காக குட்டியின் மீது யானை சானம் பூசப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டிருந்த உறவுமுறை யானை கூட்டத்துடன் குட்டியை அனுப்பி வைத்தனர். முதல் முயற்சியில் யானை கூட்டம் குட்டி யானையை சேர்க்காததால் இந்த முறை குட்டியானையை கூட்டத்தில் சேர்க்கும் வகையில் மீண்டும் யானை சாணம் தெளித்து தயார் செய்தனர். இரவு மீண்டும் அங்கு வந்த யானை கூட்டத்துடன் குட்டி யானை அனுப்பி வைத்தனர் . இந்த முறை கூட்டத்துடன் குட்டி சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் நேற்று சிசிச்சை பலனின்றி தாய் யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது இறந்து யானைக்கு 35 வயது எனவும், அதன் ஈரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம். இறந்த யானையை மற்ற விலங்குகளுக்கு இரையாக வன பகுதியிலேயே விடப்பட்டது. கூட்டத்துடன் சேர்ந்த குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ட்ரோன் மூலம் தொடர்ந்து அதன் மூமென்ட்ஸ் கண்காணிக்கப்படும் என தெரிவித்தனர். ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் ஏதாவது முகாமிற்கு அனுப்பி வளர்க்கப்படும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *