திருப்பனந்தாள் அருகே பேருந்து தொடக்க விழா
அரசு கொறாடா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பனந்தாள் ஒன்றியம் கோவில் ராமாபுரம் ஊராட்சியில் கும்பகோணம் நகரில் இருந்து ஆண்டி ராமாபுரம் கிராமத்திற்கு புதிய தடம் நீட்டிப்பு நகர பேருந்து துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செய லாளர் மிசா மனோகரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள் கும்பகோணம் போக்குவரத்து மேலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் அரசு தலைமை கொறடா கோவி செழியன் ஆகியோர் புதிய வழித்தடத்திலிருந்து கொடியை அசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகானந்தம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், பிரதிநிதி பாண்டியன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.