இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் க. கலை கல்லூரி இணைந்து பாராளுமன்றம் செயல்படும் விதம் குறித்து மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி வி.க. அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நேரு யுவ கேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் வரவேற்புரை வழங்கினார்.

வி.க அரசு கலை கல்லூரி முதல்வர் Dr. ரஜாராமன் தலைமை உரையாற்றினார் நாகை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், எம் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கு ஏற் றிவைத்து சிறப்புரையாற்றினார்.

வருவாய் கோட்ட அலுவலர் சங்கீதா நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார். My Bharat & Millet பற்றி எஸ்.அன்பழகன் உணவு பாதுகாப்புதுறை அலுவலர், Narishaki Women Empowerment பற்றி ஆர்.எஸ். முத்துகுமார் T NCDW, Mock. Parliament பற்றி அறிவழகன் தமிழ் விரிவுரையாளர் திரு.வி. க. அரசு கலை கல்லூரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

முனைவர். ஆர். பூங்கொடி வேதியியல் துணை பேராசிரியர் திரு. வி. க. அரசு கலை கல்லூரி. பி.ராஜா மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர், ஆர். பாலகிருஷ்ணன் திட்ட உதவியாளர் நேரு யுவ கேந்திரா, திருவாரூர், முனைவர் டி. எம். சண்முகசுந்தரம் நாட்டு நல ப்பணிதிட்ட அலுவலர்கள், திரு. வி.க. அரசு கலை கல்லூரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் பாராளுமன்றம் செயல்படும் விதம், சட்டம் ,நீதி, நிர்வாக துறை செயல்படும் விதம் குடியரசு தலைவர் சபாநாயகர், பிரதமர் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசியலமைப்பு நிர்வாகிகள் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.

முனைவர் ஆர். இளங்கோவன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி நன்றியுரை வழங்கினார் மேலும் தேசிய இளையோர் தொண்டர்கள், நாட்டு நலப்பணத்திட்டத் தொண்டர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இறுதியாக. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *