திரவியநகரில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம்
முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்பு
தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்; நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவின் பேரில், தென்காசி தெற்கு மாவட்ட பகுதிகளில் முன்னாள் மாவட்டச் செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், அரியப்பபுரம் ஊராட்சி, திரவிய நகரில் வீடு, வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் 2024ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர் விநியோகம் செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கு அரியப்பபுரம் ஊராட்சி பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான வக்கீல் வளன்ராஜா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சொட்டு சுப்பிரமணியன், முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில்தேவதாஸ், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன், செட்டியூர் ஹரி, கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், செந்தூர்முருகன், நிர்வாகிகள் வேலுச்சாமி, ஆறுமுகபாண்டி, அருணாசலம், சண்முகராஜ், ரூபன் டெய்லர், நடராஜன், ஆறுமுகம், முருகன், ரஜினி, கணேசன், குமரேசன், உலகநாதன், செல்லமணி, துரை, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.