தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

                             ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் எஸ். பார்கவி தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசுகையில், சுய ஒழுக்கம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகச் சிறந்த பண்பாகும்.

                                 சூழலுக்குத் தகுந்தவாறு புரிந்து படிக்க வேண்டும். கேள்வி கேட்க தயங்க தயங்கக்கூடாது .நமக்கு புரியாத தகவல்களை, படிப்பில் நமக்குத் தெரியாத விஷயங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

                         தயக்கமில்லாமல் நம்முடைய சந்தேகங்களை கேட்கும்போதுதான் நமக்கு தெளிவு பிறக்கும். எனவே வாழ்க்கையில் ஒழுக்கம், மரியாதை, தயக்கமின்மை  மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி எளிதில் நம் பக்கம் வரும்.

                         உங்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று பேசினார். கவிதை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற சபரிவர்ஷன் , ரித்திகா, லட்சுமி ,கவிஷா ,  லோகப்பிரிய ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

                       மகளிர் தினத்தினை முன்னிட்டு   மாறுவேட போட்டியில் பங்கேற்ற ஒன்றாம் வகுப்பு மாணவிகள் பிரநிஷா , ஸ்டெபி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.விழாவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆதி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *