‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்
முதுநிலைத் தமிழாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை.


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in

புலிப்பால் இரவியின் புலமையில் கவியமுதம் ….
எதார்த்த சொற்களால், எளியவரும் புரியும் வண்ணம் அரிய கருத்துக்களை அழகாகச் சேர்த்திருக்கிறார். தமிழுக்குப் புகழை சேர்த்திருக்கிறார் ஹைகூ திலகம் இரா. இரவி. இவரின் கவியமுதம் அனைவரும் பருக வேண்டிய ‘அமிழ்தம்’.

திறந்தே இருக்கு வாசல். வெற்றி கிட்டும் வரை நம்பிக்கைச் சிறகுகளால் இருக்கும் திறமைகளை இனிதே பயன்படுத்தி வரலாறு படைத்திடு, வாழ்க்கை வசமாகும் என்று முத்தான சொற்களால் முயற்சிக்கும் இளைஞர்களுக்கு முதுகு தட்டிக் கொடுத்துள்ளார்.

உலகமொழிகளின் மூலம் தமிழ்மொழி. இம்மொழி உருக்குலையலாமா? என்ன வளம் இல்லை தமிழ்ச்சொற்களில்? தமிழை நினைக்காதவன் தமிழனா? தமிழா! நீ பேசுவது தமிழா? தமிழைத் தமிழாகப் பேசிடப் பழகு! தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வை தட்டி எழுப்பியிருக்கிறார்.

எழுச்சியின் வழிகாட்டிகளான காமராசர் முதல் கலாம் வரை கவிதையில் தொட்டிருக்கிறார்.

பெண்ணின் பெருமைகளையும், தினங்களின் சிறப்புகளையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

மதுரையின் பெருமைகளை மல்லிகை மணமாய் பரப்பியிருக்கிறார்.

காதல் கொலைகளை கடிந்ததோடு, சாதிவெறியர்களைப் பற்றியும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

வாடகை வீட்டில் குடியிருப்போரின் மனவோட்டத்தை நகலாக அல்ல! அசலாகக் கவிதை வரிகளில் வடித்திருக்கிறார்.

சிற்பம் செதுக்கும் நுணுக்கத்தோடும், ஓவியம் வரையும் கவனத்தோடும் ‘கவியமுதம்’ நூலைப் படைத்திருக்கிறார்.

இளைஞர்களே!

   இந்நூலை இதயத்திலிருந்து (சு)வாசியுங்கள்!

இதயம் இதமாகும் ; வாழ்க்கை வசமாகும் ; எல்லாம் நலமாகும்.
வாழ்த்துக்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *