திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

500க்கு மேற்பட்ட விவசாய சங்கத்தை சேர்ந்தோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.