திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க “சிறப்பு புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா


திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க “சிறப்பு புகைப்படக் கண்காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையேற்று 115 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 31 ஆயிரத்து 968 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்
திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க “சிறப்பு புகைப்பட கண்காட்சி” திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் 09.03.2024 மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு 15.03.2024 வரை நடைபெற்றது. அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியில் அனைத்து துறைகளின் காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தது. தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியில் 3500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர்
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி நிறைவு விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு .257400 மதிப்பீட்டில் செயற்கை காலும், 7 பயனாளிகளுக்கு ரூ.93443 மதிப்பீட்டில் கைபேசியும், 9 பயனாளிகளுக்கு .864099 மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டரினையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் தொழில்முனை வராக்குதல் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு 1 லட்சத்திற்கான மானியமும், விதை கிராம திட்டம் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமையமாக்கல் திட்டத்தின் சார்பில் 1 பயனாளிக்கு சுழல் நிதியாக 50000மும் விதை கிராம திட்டம் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமையமாக்கல் திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு சுழல் நிதியாக .50000மும், தாட்கோ சார்பில் 7 பயனாளிக்கு பவர் டில்லர், உட்கட்டமைப்பு, நில மேம்பாடு திட்டம், கட்டுமானம், கோழி இறைச்சி வியாபாரம் பெருங்காயம் உற்பத்தி மற்றும் வியாபாரம், ஆடு வளர்ப்பு என தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் தொகையாக .1629026மும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா 5600 மதிப்புள்ள இலவச தையல் இயந்திரத்தினை 5 பயனாளிகளுக்கும், தலா 6000 மதிப்புள்ள இலவச சலவை பெட்டியினை 5 பயனாளிகளுக்கும், தலா 6000 மதிப்புள்ள இலவச தையல் இயந்திரத்தினை 5 பயனாளிகளுக்கும் என 115 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 31 ஆயிரத்து 968 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் 2023-34 கீழ் திருத்துறைப் பூண்டியினை சேர்ந்த திரு.ரவிக்குமாருக்கு முதல் பரிசாக. ரூ.15000மும் மன்னார்குடியினை சேர்ந்த. ராஜாவுக்கு இரண்டாம் பரிசாக. 10000மும், 09.03.2024 முதல் 15.03.2024 வரை அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கும் கலை குழுவினர்களுக்கும், துறை ரீதியாக. காட்சி அரங்கு அமைத்தவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களினை வழங்கினார்
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால் திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் பணி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ், திட்டக்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட அனைத்து அரசு உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *