மாறந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் பேரணி;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாறந்தை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் பேரணி நடைபெற்றது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜீவா தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்திருமலை வடிவு வரவேற்று பேசினார்
ஆலங்குளம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ராஜா,ஆலங்குளம் வட்டார வளமைய
சிறப்பு ஆசிரியர் ஜெய ஜோதி,உதவி ஆசிரியர் குப்பம்மாள் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
மாறாந்தை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுப்ரமணியன் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கை பேரணியினை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் அரசு திட்டங்களான
இல்லம் தேடி கல்வி,நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம் , கலைத் திருவிழா கோட கொண்டாட்டம்சிறார் திரைப்பட விழா, வானவில் மன்றம் ,அனைவருக்கும் காலை உணவு திட்டம், பள்ளியின் பெருமை காலை சிற்றுண்டி இது போன்ற 43 – க்கும் மேற்ப்பட்ட திட்டங்களை பெற்றோர்களிடம்
எடுத்து கூறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில்,பள்ளி மேலாண்மை குழு தலைவி சசிகலா, ஆசிரியர்கள்முப்புடாதி, துர்கா, மற்றும் மாணவ மாணவிகள், உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
இறுதியில் மாணவ மாணவிகளுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது.