காலி பணியிடங்களை நிரப்பக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்…..

தமிழகம் முழுவதும் இந்த வருடம் 2024-25 நிலவரப்படி 25 ஆயிரத்து 33 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளநிலையில் வெறும் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே நியமன தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான எந்த ஒரு தேர்வும் நடத்தப்படாத நிலையில் தற்போது நடைபெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் காலி பணியிடங்கள் மிக குறைவான அளவிலேயே உள்ளதால் அதை அதிகரிக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் இருந்து நியமன தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மனு பெட்டியில் போட்டு சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *