தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் காவல் நிலையத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

இக்கூட்டத்திற்கு காவல் ஆய்வாளர் மாதவன் தலைமை வகித்து பேசினார்.

அவர் பேசும் போது, அரசியல் கட்சியினர் தாங்கள் போஸ்டர், பிளக்ஸ் அடித்தால் அடிக்கும் பிரஸ் பெயர் போன் நம்பர் இருக்க வேண்டும்
பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல்டிஜிட்டல் பேனர்கள் அமைக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளைஅனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் தாங்கள் கட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும்.

வியாபாரிகள் தாங்கள் வியாபார விசயமாக வெளியில் செல்லும்போதுதேர்தல் ஆணையம் அறிவித்த ரூ.50 ஆயிரம் மட்டுமே கையில் எடுத்து செல்ல வேண்டும்.

சமூக வலை தளங்களில் விரும்பத்தகாத தகவல்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். காவல் துறையினர் அனைவருக்கும் பொதுவானவர்கள்
என காவல் ஆய்வாளர் மாதவன் பேசினார்.

கூட்டத்தில் திமுக நகர தலைவர் வக்கில் நெல்சன், காங்கிரஸ் நகர தலைவர் வில்லியம் தாமஸ், நகர வியாபார சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துவேல், பிஜேபி
மண்டல துணை தலைவர் அன்புராஜ், காமராஜர் மக்கள் பேரவை நிறுவன தலைவர் வக்கீல் ராஜா, பெரியார் குமார், அமமுக ஒன்றிய செயலாளர் முருகன், நகரசெயலாளர் சுப்பையா, 
அதிமுக டி.டி.தங்கச்சாமி,கம்யூனிஸ்ட் கட்சி பாலு, சந்தணகுமார், தமிழ் புலிகள் கட்சி கார்த்திக், திமுக மாவட்ட பிரதிநிதிஅன்பழகன், அதிமுக வக்கீல் சாந்தகுமார், அதிமுக ஓபிஎஸ் அணி கணேசன், காங்கிரஸ் கட்சி லிவிங்ஸ்டன் விமல், பனங்காட்டு படை கட்சி அலெக்ஸ், தேமுதிக நகர
செயலாளர் தாசன், பிஜேபி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *