சென்னை சத்தியமூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்நாடு விவசாய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கும்பகோணம் ஓ.வி. கே.வெங்கடேஷ் விருப்ப மனு.

திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில் ஒருசில நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது..

இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கும்பகோணம் ஓ.வி. கே.வெங்கடேஷ் தனது விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்தார்.

அப்போது தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மாமன்ற உறுப்பினர் அய்யப்பன்,நகர விவசாய காங்கிரஸ் செயலாளர் பாலு காடுவெட்டியார்,
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பங்குடு கணபதி,மாவட்ட மீனவர் அணி தலைவர் சேட்டு மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *