வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழாவைமுன்னிட்டு, ஐந்தாம் நாள் விழாவாக வர்த்தகர் சங்கம் மண்டகப்படி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ம் தேதி பூச்சொறிதல் விழாஉடன் திருவிழா ஆரம்பித்தது. 10-ம் தேதி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் 17-ம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதலுடன் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் ஐந்தாம் நாள் விழாவில் வலங்கைமான் வர்த்தகர் சங்கம் மண்டகப்படியை முன்னிட்டு மதியம்12- மணிக்கு அம்மனுக்கு அபிஷேகஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை அனைத்து வணிகர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணி அளவில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இரவு ஏழு மணி அளவில் ஆசிரியர் ஏ. செல்லப்பா வழங்கும் சீபா சுருதீ இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது

. மண்டகப்படி மற்றும் நிகழ்ச்சி உபயத்தை வலங்கைமான் வர்த்தகர் சங்கம் செய்திருந்தது. நிகழ்ச்சியில் வலங்கைமான் வர்த்தகர் சங்க கௌரவ தலைவர் என். பரதாழ்வார், சங்கத்தின் தலைவர் கே. குணசேகரன்,செயலாளர் ஜி. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி,துணைத் தலைவர் என்.மாரிமுத்து, இணை செயலாளர்கள் எஸ். சிவசங்கரன், ஒய். யாஹூப் சலீம் மற்றும் நிர்வாக குழுவினர், சங்க உறுப்பினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இவ்வாலயத்தில் வருகின்ற 24 -ம் தேதி புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழாவும், 31-ம் தேதி புஷ்ப பல்லக்கு விழாவும், ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழாவும் நடைபெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *