தரங்கம்பாடியில் 100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யவும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எரிவாயு உருளையில் என் வாக்கு என் உரிமை என துண்டு பிரசுரம் ஒட்டிய தேர்தல் அதிகாரிகள்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யவும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கேஸ் ஏஜென்சிகள் மூலம் வீடுகளுக்கு வினியோக. செய்யப்படும் எரிவாயு உருளையில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம் பதிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் ஒட்ப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், மாலா கேஸ் ஏஜென்சி மேலாளர் கிருபாகரன் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் பாலாஜி,விக்னேஸ்வரன், சீனிவாசன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *