சத்தியமங்கலம் சத்தியமங்கலத்தில்
மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார், துணை ராணுவ த்தினர் கொடி அணி வகுப்பு நடத்தினர் .தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வருகிற 19 ம்தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சத்தி டிஎஸ்பி சரவணன் தலைமையில் கொடி அணி வகுப்பு நடந்தது. கொடி அணி வகுப்பு பேரணியானது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தொடங்கி மணிக்கூண்டு, பழைய மார்க்கெட், சுந்தர் மஹால் , வடக்கு பேட்டை, அத்தானி ரோடு, ஆற்றுப்பாலம், எஸ் பி எஸ் கார்னர், கோவை ரோடு வழியாக தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

இதில் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு , மகளிர் காவல் ஆய்வாளர் ஹோமலதா உள்பட போலீசார், துணை ராணுவ த்தினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *