தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூருக்கு இரண்டு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதில் பயணிகளை ஏற்றுவதில் அடிக்கடி இரண்டு பேருந்துகளுக்கும் சண்டை இருந்து வந்தது இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் நல்லூரிலுள்ள நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி ஆண்டு தேர்வு எழுதுவதற்கு மினி பஸ்சில் சென்றனர்.

அப்போது பள்ளிக்கு செல்லும் மாணவர்களை
ஏற்றுவதில் இரண்டு மினி பஸ்களுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு மினி பஸ்களும் ஒன்றன்பின் ஒன்று போட்டி போட்டு சென்றது.

நல்லூர் ஊருக்கு மேல்புறம் சென்ற போது இரண்டு பஸ்களும் ஒன்றன் பின் ஒன்று போட்டிப்போட்டு சென்றதில் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள்.அகிலா (15),அபிதா(15), மாரியம்மாள் (11), இலக்கியா (14) காவியா(15), வைத்தீஸ்வரி (14),வர்ஷினி (13),மதுமிதா (14),மேகதர்ஷினி (14), பூர்விகா (11), கமலேஷ் (13), ராஜா (13),கவின் கண்ணன் (15), பெல்சியா (13) ஆசிரியர் முத்துலதா ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குசென்று முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர். இதில் பெல்சியா வலது
கை முறிவு ஏற்பட்டு ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அகிலா என்ற மாணவிமேல்சிகிச்சைக்காக
தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் 2 மினி பஸ்களையும் சிறை பிடித்து வைத்தனர். ஆலங்குளத்தில் மினி பஸ்கள் அடிக்கடி மோதுவ தும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இதுகுறித்து அந்த இரண்டு மினி பஸ்கள் மீதும் 
ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *