திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில், நாகை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் எம் எல் ஏ தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை. செல்வராஜ் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வலங்கைமான் ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் துவங்கிய பிரச்சார பயணம், உத்தமதானபுரம், அவளியநல்லூர், நல்லூர், இனாம் கிளியூர், முனியூர், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம்,ஆவூர், ஆதிச்ச மங்கலம், விருப்பாச்சிபுரம் மற்றும் வலங்கைமான் பேரூராட்சி வார்டு பகுதிகளில், கடைவீதி வர்த்தக வியாபாரிகள், வாக்காளர்களை சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.

பிரச்சார பயணத்தில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன். கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்றதுணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன், எஸ். ஆர். ராஜேஷ் , காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க தலைவர் குலாம் மைதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், கட்சி நிர்வாகிகள் ரெங்கராஜன், பட்டம் தட்சிணாமூர்த்தி, ஆதிச்ச மங்கலம் உதயகுமார், சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. எஸ்.கலியபெருமாள், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என். ராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே. சுப்பிரமணியன் மற்றும் இந்தியா கூட்டணியின் கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *